

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களின் ஆடம்பர முடிவெட்டுதலை தடுக்க, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் முடிவெட்டும் போது, தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக்' போன்ற அலங்காரங்களை தவிர்த்து, பள்ளி சூழலுக்கு ஏற்ப, மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யுங்கள் என தெரிவித்திருந்தார். இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த திருவூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ஒழுக்க நலன் கருதி அவர்களுக்கு முடி வெட்டுவதில் ஒழுக்கம் பேண வேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு ஆடம்பரமான முடி திருத்தங்கள் செய்யக்கூடாது எனவும், மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே ஒழுக்கத்தை பேணும் விதமாக முடித்திருத்தம் (மிலிட்டரி கட்டிங் ) செய்து வைத்தனர்.