திருச்செங்கோடு அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு ஒன்றியம் பால்மடையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நல்லியப்பன், கந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணைத்தலைவர் சங்கர், மாநில உதவி செயலாளர் மணி மற்றும் மாவட்ட உதவி தலைவர் வேலாயுதம், மாவட்ட பொருளாளர் தங்கரத்தினம், கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பசும்பால் லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51-ம் வழங்க வேண்டும். பால் பணப்பாக்கி, ஊக்கத்தொகை, போனஸ் உள்ளிட்டவைகளை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வாகனத்தில் ஏற்றும் முன்பாக அளவையும், தரத்தையும் குறித்து கொடுக்க வேண்டும். ஆவின் கலப்புத் தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தைவேல் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com