ஆவின் பால் விலை உயர்த்தப்படாது: அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
ஆவின் பால் விலை உயர்த்தப்படாது: அமைச்சர் மனோ தங்கராஜ்
Published on

சென்னை,

சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"தமிழ்நாட்டில் பால் விலையை இப்போதைக்கு உயர்த்துவதற்கு எந்த முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை. ஆவின் பால் விலை உயர்த்தப்படும் என்பது கற்பனை. இதுகுறித்து தவறான செய்தி பரவி வருகிறது. சந்தையில் உள்ள பல்வேறு நிறுவன பாலுடன் ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை குறைவு.

சந்தையில் தனியார் நிறுவன நெய் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. ஆனால் ஆவின் நெய் ரூ.700க்கு விற்கப்படுகிறது. ஆவின் பொருட்களின் அளவிலும் தரத்திலும் எந்த சமரசமும் நாங்கள் செய்யவில்லை. புகார்களை ஆய்வுசெய்து சரிசெய்து வருகிறோம்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com