ஆவின் பால் விலை உற்பத்தியாளர் நலன் கருதியே உயர்த்தப்பட்டுள்ளது; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி

ஆவின் பால் விலையானது உற்பத்தியாளர் நலன் கருதியே உயர்த்தப்பட்டுள்ளது என முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியில் கூறியுள்ளார்.
ஆவின் பால் விலை உற்பத்தியாளர் நலன் கருதியே உயர்த்தப்பட்டுள்ளது; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி
Published on

சேலம்,

ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது குறித்து, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறும்பொழுது, பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து, அலுவலக செலவு போன்றவை உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என கூறினார். இதனால் பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.32 ஆகிறது. எருமைபால் கொள்முதல் விலை ரூ.6 உயர்ந்து ரூ.41 ஆகிறது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால், 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.

ஆனால் இதுவே தனியார் பால்விலை ஒரு லிட்டர் ரூ.44, ரூ.46 மற்றும் ரூ.50 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் விலையை உயர்த்திய பிறகும், தனியார் விலையை விட குறைவாக தான் இருக்கிறது. தனியார் பால் விலையை விட குறைவாகவே உயர்த்தப்பட்டு இருப்பதால், நுகர்வோருக்கு பணச்சுமை இருக்காது.

ஆவின் பால் விற்பனை விலை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது என கூறினார்.

இந்த நிலையில், சேலத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, பால் உற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது. சட்டப்பேரவையில் அறிவித்தப்படிதான் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என பேட்டியில் கூறியுள்ளார். மழை அளவை பொறுத்துதான் மேட்டூர் அணையில் நீர் திறப்பு உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com