வாகனம் மோதி பால் வியாபாரி பலி

வாகனம் மோதி பால் வியாபாரி பலி
வாகனம் மோதி பால் வியாபாரி பலி
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே பெரிய ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 52). பால் வியாபாரி. இவர் திருமங்கலத்தில் இருந்து பெரிய ஆலங்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சொக்கநாதன்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் போஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com