காயல்பட்டினம் கடற்கரையில் குவிந்த லட்சக்கணக்கான மீன்கள்: போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்

பேச்சாளை எனப்படும் மத்தி மீன்கள் அலை அலையாகக் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.
காயல்பட்டினம் கடற்கரையில் குவிந்த லட்சக்கணக்கான மீன்கள்: போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்
Published on: 

திருச்செந்தூர்,

காயல்பட்டினம் சிங்கித்துறை கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் குவிந்தநிலையில், பொதுமக்கள் அதனை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.

பேச்சாளை மீன்கள்

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் கடற்கரையில் உயிருடன் கூட்டம் கூட்டமாக பேச்சாளை மீன்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. காயல்பட்டினம் சிங்கித்துறை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய பேச்சாளை மீன்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு அள்ளிக்கொண்டு சென்றனர்.

கடல் நீரோட்டம் மற்றும் தட்பவெப்ப மாற்றம் காரணமாக இக்கடற்கரையில் ஆயிரக்கணக்கான பேச்சாளை எனப்படும் மத்தி மீன்கள் (Sardine fish) அலை அலையாகக் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இந்த பகுதி சுற்றுலா கடற்கரையை விட, மீனவர்கள் கடலுக்குச் செல்லும் மற்றும் ஏல முறையில் (Tender) குறைந்த விலையில் புதிய மீன்களை வாங்கும் முக்கிய இடமாக இந்த கடற்கரை விளங்குகிறது.

மணப்பாடு

முன்னதாக கடந்த 10-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே மணப்பாடு மணல் குன்றில் சவேரியார் வாழ்ந்த குகை முதல் வடபுற கடலோரத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாளை மீன்கள் உயிருடன் கூட்டமாக கரை ஒதுங்கின. ஆயிரக்கணக்கான மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியதைப் பார்த்த மீனவர்கள் அங்கு நாட்டுப்படகில் சென்று கூடைகளில் மீன்களை அள்ளினர். கடற்கரைக்கு சுற்றுலா வந்த பயணிகளும், பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளில் சாளை மீன்களை ஆர்வமுடன் அள்ளிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

X