

சென்னை,
இந்தியாவின் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளைக் கடுமையாகச் சாடும் வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் முன்னணி நடிகருமான கமல்ஹாசன், அமெரிக்க அதிபருக்கு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் சமூக வலைத்தளக் கணக்கைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள அவர், "சுதந்திரமானதும்இறையாண்மையுள்ளதுமான ஒரு தேசத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். கடல் கடந்து தூர தேசங்களில் இருந்து வரும் அந்நிய நாடுகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் நிலையில் நாங்கள் இனியுமில்லை" என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க அதிபரே, உங்களால் முடிந்தவரை உங்கள் நாட்டு விவகாரங்களை, உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போங்கள்" (Mind your own business) என மிகவும் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இறைமையுள்ள இரு தேசங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையே உலக அமைதிக்கான ஒரேயொரு அடிப்படை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அமெரிக்க தேசத்திற்கும் மக்களுக்கும் அமைதியும் சுபீட்சமும் கிட்ட வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.