நாமக்கல் அருகேகிராமத்துக்குள் செல்லாத மினிபஸ் சிறைபிடிப்பு

நாமக்கல் அருகேகிராமத்துக்குள் செல்லாத மினிபஸ் சிறைபிடிப்பு
Published on

நாமக்கல்லில் இருந்து சின்ன முதலைப்பட்டி, விட்டமநாயக்கன்பட்டி, ராசாகவுண்டனூர் வழியாக சேந்தமங்கலம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக விட்டமநாயக்கன்பட்டி கிராமத்துக்குள் செல்லாமல் நேராக மெயின் ரோட்டில் மரூர்பட்டி வழியாக சென்று வந்தது. பலமுறை கோரிக்கை விடுத்தும் மினிபஸ் விட்டமநாயக்கன்பட்டி வழியாக செல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மரூர்பட்டி- விட்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் மினி பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரீட்டா பழனிசாமி, ஊராட்சி செயலாளர் சக்திவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மினிபஸ்சை விட்டமநாயக்கன்பட்டி வழியாக இயக்குவதாக பஸ் உரிமையாளர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com