குமரியில் மினி மாரத்தான் போட்டி - 2 வயது சிறுமி 7 கி.மீ. தூரத்தை கடந்து சாதனை

விமர்ஷினி வர்ஷா தனது தந்தையுடன் மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்துள்ளார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கூட்டப்புளி மற்றும் நடைக்காவு சந்திப்பில் தொடங்கி, கொல்லங்கோடு சந்திப்பு வரை இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் 2 வயது பெண் குழந்தை விமர்ஷினி வர்ஷா தனது தந்தையுடன் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், அவர் 7 கி.மீ. தூரத்தையும் ஓடிக் கடந்து சாதனை படைத்துள்ளார். இத்துடன் அவர் இதுவரை 18 ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு ஓடியிருக்கிறார். அவரது சாதனையை கவுரவித்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story






