மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்; தேங்காய் வியாபாரி பலி

கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் தேங்காய் வியாபாரி பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்; தேங்காய் வியாபாரி பலி
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சர்தார் (வயது 65). தேங்காய் வியாபாரியான இவர் நேற்று அதிகாலையில் சொக்கம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தார்.

அப்போது கேரளாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சர்தார் சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து சென்று, இறந்த சர்தாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான சகாயம் பிரபாகரனை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com