திருவண்ணாமலையில் மினி வேன் கவிழ்ந்து விபத்து

இந்த விபத்தில் வேன் டிரைவர் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
திருவண்ணாமலையில் மினி வேன் கவிழ்ந்து விபத்து
Published on

திருவண்ணாமலை,

வந்தவாசியில் இருந்து குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சேத்துப்பட்டிற்கு வினியோகத்திற்காக சென்று கொண்டிருந்தது.

வந்தவாசி அடுத்த ஆராசூர் கூட்ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதனால் மினி வேன் டிரைவர் மோதலை தவிர்க்க முயன்று திடீரென வண்டியை திருப்பி பிரேக் போட்டார். அதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேன் டிரைவர் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையில் கவிழ்ந்து கிடந்த மினி வேனை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com