ஆசிய செஸ் போட்டியில் தங்கம் - தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக சாதனைகள் பல புரிய தமிழ்நாடு அரசு பக்கபலமாக இருக்கும்.
ஆசிய செஸ் போட்டியில் தங்கம் - தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
Published on

சென்னை,

பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மங்கோலிய நாட்டின் உலான்படோர் நகரில் நடைபெற்ற '21-வது ஆசியத் தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்' போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனையர் சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ள செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் பெருமை

இந்திய நாட்டின் அடையாளமாகவும், தமிழ்நாட்டின் பெருமையாகவும் தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக சாதனைகள் பல புரிய தமிழ்நாடு அரசு பக்கபலமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com