காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை அமைச்சர் அன்பழகன் ஆய்வு செய்கிறார்

காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை அமைச்சர் அன்பழகன் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றார்.
காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை அமைச்சர் அன்பழகன் ஆய்வு செய்கிறார்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிரம்பி வரும் நிலையில் மதகுகள், கிளியாற்றின் கரைகளை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகின்றனர்.

காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நேற்று நிரம்பியது. இதனை தொடர்ந்து கிளியாற்றில் நீர் திறந்து விடப்பட்டது.

இதனை அடுத்து கத்திரிச்சேரி, விமுதமங்கலம், முன்னூத்திகுப்பம், முருக்கச்சேரி, தச்சூர் உள்ளிட்ட வலது கரை கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று மலைப்பாளையம், கருங்குழி, தோட்டநாவல், மேட்டுக்காலனி, இருசாமநல்லூர் உள்ளிட்ட இடது கரை கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஏரி நிரம்பிய நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆற்றில் வெள்ளம் செல்லும் நிலையில் அதனை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அமைச்சர்கள் அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ஏரி நிரம்பியதும் திறந்து விடும் நடைமுறை பற்றி அமைச்சர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com