கருணாநிதி உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை
Published on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தி.மு.க. மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஜெயக்குமார் ரூபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com