பெங்களூரு ஆஸ்பத்திரியில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 'டிஸ்சார்ஜ்'

பெங்களூரு ஆஸ்பத்திரியில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘டிஸ்சார்ஜ்' ஆகி சென்னை திரும்பினார்.
பெங்களூரு ஆஸ்பத்திரியில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 'டிஸ்சார்ஜ்'
Published on

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருடன் வந்த அதிகாரிகள் அவரை காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூரு அருகே சந்தாபுராவில் உள்ள நாராயணா இருதயாலயா ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாலும், வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டதாலும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை

மேலும் அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள், அதாவது இதய செயல்பாடுகளை அறிந்து கொள்ள ஈ.சி.ஜி., ஆஞ்சியோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவரது இதயம் சீரான முறையில் இயங்குவது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், வீட்டுக்கு செல்லலாம் என்று கூறினர். இதையடுத்து அமைச்சா அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை 10.30 மணியளவில் 'டிஸ்சார்ஜ்' ஆகி புறப்பட்டார். அவர் காரிலேயே சென்னை திரும்பினார். அவருடன் அதிகாரிகள், கட்சியினர், குடும்பத்தினரும் வந்தனர்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com