சிங்காரப்பேட்டை செல்லும் சாலையை விரிவுபடுத்த அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

திருப்பத்தூர்-சிங்காரப்பேட்டை இடையே குறுகலாக உள்ள சாலையை விரிவாக்கம் செய்து அகலப்படுத்த அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
சிங்காரப்பேட்டை செல்லும் சாலையை விரிவுபடுத்த அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
Published on

திருப்பத்தூர்-சிங்காரப்பேட்டை இடையே குறுகலாக உள்ள சாலையை விரிவாக்கம் செய்து அகலப்படுத்த அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது திருப்பத்தூர்- சிங்காரப்பேட்டை சாலை அகலம் குறைவாகவும். ஆங்காங்கே சாலை வளைந்து இருப்பதையும், பாலங்கள் குறுகியும் உள்ளதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக சிங்காரப்பேட்டை வரை உள்ள 30 கிலோ மீட்டர் தூரமும் 10 மீட்டர் அளவுக்கு சாலையை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்ய அப்போது அவர் உத்தரவிட்டர்.

இப்பணிகளை இந்த ஆண்டிலேயே எடுத்து செய்யும் வகையில் துரிதமாக பணிகள் மேற்கொள்ளவும், இந்த சாலை அகலப்படுத்தும் போது ஏரி வளைவு பகுதியை அகலப்படுத்தவும் வளைவுகளை நேர்படுத்தவும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேலுவுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

ரூ.50 கோடியில்...

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஏ.வ. வேலு கூறியதாவது: திருப்பத்தூர் சிங்காரப்பேட்டை சாலை 30 கிலோமீட்டர் தூரத்தில் அகலப்படுத்தி வளைவுப்பகுதிகளை நேர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஏரிப்பகுதி வளைவுகளில் விபத்தை தடுக்க 10 கிலோமீட்டர் தூரம் அகலப்படுத்தி விரிவாக்கம் செய்ய உடனடியாக பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் அகலப்படுத்தவும் விரிவாக்கம் செய்யவும் உத்திரவிடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ 50 கோடியில் தரைப்பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், கோட்ட பொறியாளர் இ.முரளி, மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com