

சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இன்று (10.05.2026) சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் துவக்கி வைத்தார்.
மேலும், ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள மின்னகம் நீங்கலாக 70 மின்தடை நீக்க மையங்களுடன் (Fuse of Call) கூடுதலாக தற்போது 77 புதிய மின்தடை நீக்க மையங்கள் உருவாக்கப்பட்டு உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.
கூடுதலாக, 5 எம்.ஆர்.டி. சிறப்பு குழுக்கள், உயரழுத்த மின் புதைவட மின் கேபிள் பழுதுகளை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்யும் உபகரணங்களுடன் கூடிய 4 சிறப்பு வாகனங்களும், உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மேல்நிலை கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய 7 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் மூலம் போதிய அளவு மின்சாரம் கிடைக்கப்பெற்று வரும் நிலையில், சில நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் புதைவட கேபிள் பழுது, மின்மாற்றி கோளாறு, மின்பாதை துண்டிப்பு, மழை மற்றும் காற்று உள்ளிட்ட பருவநிலை காரணிகள், ஆர்.எம்.யூ. பழுது மற்றும் அதிஉயரழுத்த மின்மாற்றி பழுதுகள் போன்ற எதிர்பாராத காரணங்களால் அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை விரைவாக சரிசெய்து, நுகர்வோருக்கு தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில் மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் தலைமைச் செயலாளர் முன்னிலையில் நேற்று (09.06.2026) விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் மின் தடைகளை கண்காணித்து, மின் விநியோக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக 10 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்களுக்கு தேவையான கூடுதல் கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ஏற்கனவே செயல்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் மொபைல் மீட்புக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
· முக்கிய மின் தடைகள் மற்றும் பழுதுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்தல்,
· பெரிய அளவிலான பழுதுகள் தொடர்பான தகவல்களை உடனடியாகப் பெறுதல்,
· மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணிகளின் முன்னேற்றத்தை கண்காணித்தல்,
· பின்னூட்டம் உள்ளிட்ட மாற்று மின் வழங்கல் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தல்,
· மனிதவளம், வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் பராமரிப்புப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல்,
· மின்னகம் மற்றும் புகார் மையங்கள் மூலம் பெறப்படும் புகார்களை ஆய்வு செய்தல்,
· மின் விநியோக மீட்பு குறித்த தகவல்களை நுகர்வோருக்கு உடனுக்குடன் தெரிவிப்பதை உறுதி செய்தல்,
· மீண்டும் மீண்டும் பழுதுகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து நிரந்தர தீர்வுகளுக்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
மீண்டும் மீண்டும் ஏற்படும் கேபிள் பழுதுகள், நீண்ட நேர மின் தடைகள், மின்மாற்றி கோளாறுகள், பீடர் துண்டிப்புகள், துணை மின் நிலைய உபகரண கோளாறுகள், குடிநீர், மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள்
பாதிக்கப்படும் பகுதிகள், மின்னகம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அதிக புகார்கள் பெறப்படும் பகுதிகள் ஆகியவற்றின் மீது இக்குழுக்கள் சிறப்பு கவனம் செலுத்தும்.
அவசரகால பராமரிப்பு மற்றும் உடனடி மின் விநியோக மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில் தலைமைப் பொறியாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை, கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு ரூ.75,000 வரை, செயற்பொறியாளர்களுக்கு ரூ.50,000 வரை, உதவி செயற்பொறியாளர்களுக்கு ரூ.25,000 வரை மற்றும் உதவிப் பொறியாளர்கள்/இளநிலைப் பொறியாளர்களுக்கு ரூ.10,000 வரை அவசர செலவினத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் செலவினங்களுக்கும் தேவையான தொகை உடனடியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தற்போது சுமார் 3.52 கோடி மின் நுகர்வோர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. 1,910 துணை மின் நிலையங்கள், 4.47 லட்சத்திற்கும் அதிகமான மின்மாற்றிகள் மற்றும் விரிவான மின் விநியோக கட்டமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய பரந்த மின் கட்டமைப்பில் ஏற்படும் பழுதுகளை விரைவாக சரிசெய்து, மின் தடைகளின் கால அளவை குறைத்து, நுகர்வோர் திருப்தியை மேம்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் செயல்படும்.
TNPDCL-இன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (CMD) அனைத்து குழுக்களுக்கும் வழிகாட்டுவார். தேவையான இடங்களில் நேரடியாக ஆய்வுகளையும் மேற்கொள்வார்.
பி.என். ஸ்ரீதர், I.A.S. மேலாண்மை இயக்குநர், பசுமை எரிசக்தி கழகம் 📞 97899 10435 / 9600303341
பொறியாளர் கருப்பசாமி செயற்பொறியாளர் (காற்றாலை / NCES) 📞 99520 92312
பொறியாளர் ராஜா உதவி செயற்பொறியாளர் (NCES) 📞 82481 05367
ஆய்வு செய்யும் பகுதிகள்: அண்ணா நகர், கோடம்பாக்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.
எம்.கோவிந்த ராவ், I.A.S. மேலாண்மை இயக்குநர், TNPGCL 📞 94443 80030
பொறியாளர் பாண்டுரங்கன் செயற்பொறியாளர் (திட்டங்கள்) 📞 94442 67399
பொறியாளர் அருண் சித்தார்த்த வடிவேலன் செயற்பொறியாளர் (திட்டங்கள்) 📞 94442 28050
ஆய்வு செய்யும் பகுதிகள்: சின்மயா நகர், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.
பொறியாளர் அ.கிருஷ்ணவேல் மேலாண்மை இயக்குநர், TANTRANSCO 📞 94450 60400
பொறியாளர் ஆர். கிருஷ்ணகுமார் செயற்பொறியாளர் (இயக்கம்), புளியந்தோப்பு 📞 80153 40663
ந.இளங்கோ போர்மேன் நிலை –I (P&C) 📞 72994 98228
ஆய்வு செய்யும் பகுதிகள்: புளியந்தோப்பு, CMBT, மாதவரம், பேசின் பிரிட்ஜ், தொண்டையார்பேட்டை, வியாசர்பாடி, கொடுங்கையூர், காலடிப்பேட்டை, மணலி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.
பொறியாளர் சி.ராஜலட்சுமி இயக்குநர் (தொழில்நுட்பம்), மின் உற்பத்தி கழகம் 📞 94458 52222
பொறியாளர் கணேசன் செயற்பொறியாளர், இயக்குநர் (தொழில்நுட்பம்) அலுவலகம் 📞 94458 55000
பொறியாளர் சரவணன் உதவி செயற்பொறியாளர் (திட்டங்கள்) 📞 99528 10710
ஆய்வு செய்யும் பகுதிகள்: தி.நகர், சி.ஐ.டி. (CIT) நகர், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.
பொறியாளர் அசோக் குமார் இயக்குநர் (மின் தொடரமைப்பு திட்டங்கள்) 📞 94458 56666
பொறியாளர் தி.சண்முகவடிவேல் செயற்பொறியாளர் (இயக்கம்), சென்ட்ரல் 📞 94459 91385
கார்த்திகேயன் போர்மேன் தரம்–I, சென்ட்ரல் CMRL துணை மின்நிலையம் 📞 99413 49887
ஆய்வு செய்யும் பகுதிகள்: சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அரும்பாக்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.
பொறியாளர் கலைவாணி தலைமைப் பொறியாளர் (PPP) 📞 94454 48804
கே.சுந்தரவதனம் இயக்குநர் (நிதி), மின்தொடரமைப்பு 📞 94458 54444
பொறியாளர் அப்துல் அஜாஸ் செயற்பொறியாளர் (தரவு மையம்) 📞 94433 94187
பொறியாளர் நெடுமாறன் உதவி செயற்பொறியாளர் (மின்மாற்றிகள்/பொருள் மேலாண்மை) 📞 94458 67827
ஆய்வு செய்யும் பகுதிகள்: வில்லிவாக்கம், சிட்கோ (SIDCO) நகர், மதுரவாயல், அம்பத்தூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.
பொறியாளர் ஜான் டால்டன் இயக்குநர் (திட்டங்கள்) 📞 94431 66333
பொறியாளர் பாலாஜி செயற்பொறியாளர் (கிடங்கு/MM) 📞 94458 67803
பொறியாளர் செந்தில் உதவி பொறியாளர் (வணிகம்) 📞 94440 99492
ஆய்வு செய்யும் பகுதிகள்: முட்டுக்காடு, இஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.
பொறியாளர் எல்.லீனா தலைமைப் பொறியாளர் (MM) 📞 94458 57627
பொறியாளர் எஸ். முரளிதரன் செயற்பொறியாளர் (Iron/MM) 📞 94458 67802
பொறியாளர் பார்த்தசாரதி தலைமைப் பொறியாளர் (வணிகம்) அவர்களின் நிர்வாக உதவியாளர் 📞 94458 59545
ஆய்வு செய்யும் பகுதிகள்: எம்.கே.பி. நகர், பெரம்பூர், ICF, GKM காலனி, பூம்புகார் நகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.
பொறியாளர் பி.சரவணன் தலைமைப் பொறியாளர் (தொடரமைப்பு திட்டம் & மின் கட்டமைப்பு இயக்கம்) 📞 94454 12229
பொறியாளர் பாலமுருகன் செயற்பொறியாளர் (இயக்கம்), கிண்டி 📞 94450 60153
நரசிம்மன் போர்மேன், 230 KV துணை மின்நிலையம், போரூர் 📞 99629 28281
ஆய்வு செய்யும் பகுதிகள்: போரூர், ஐயப்பந்தாங்கல், மாங்காடு, DLF, காட்டுப்பாக்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.
பொறியாளர் காஞ்சனா தலைமைப் பொறியாளர் (P&C), சென்னை 📞 94453 97070
பொறியாளர் ஜெயக்குமார் செயற்பொறியாளர் (P&C), கிண்டி 📞 94458 92693
பொறியாளர் ராம்கி உதவி பொறியாளர் (P&C), கிண்டி 📞 81488 69799
ஆய்வு செய்யும் பகுதிகள்: ராமாபுரம், கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.