

வேலூர்,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய எட்டு நாட்கள் இருந்த நிலையில் அதில் நான்கு நாட்கள் விடுமுறை தினங்கள் இருந்ததால் இன்று ஏராளமான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். கடைசி நாளான இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்துள்ள அமைச்சர் துரைமுருகனுக்கு ரூ.11.5 கோடி அளவில் அசையும் மற்றும் அசையா சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார். துரைமுருகன் அரை கிலோ தங்கம், ஒரு காரட் வைரம், 2கிலோ வெள்ளியும் வைத்திருக்கிறார். அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் ரூ.59 கோடி சொத்து உள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.