

தமிழக-கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு இன்று அதிகாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு விதிகளை மீறி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், கனிமவள கடத்தலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வினை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியருடன் கனிமவள கடத்தலை தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.