ரூ.21½ லட்சத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்

நெமிலி ஒன்றியத்தில் ரூ.21½ லட்சத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
ரூ.21½ லட்சத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
Published on

நெமிலி,

நெமிலி ஒன்றியத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

அதன்படி பனப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.14 லட்சத்து 60 ஆயிரத்தில் நெடும்புலி தொடக்க கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கட்டப்பட்டுள்ள முழுநேர ரேஷன் கடையின் புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ரூ.7 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து மேலபுலம் ஊராட்சியில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் வளர்மதி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சிவமணி, சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com