செம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணி; அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு

செம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணியை அமைச்சர் இ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணி; அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு
Published on

செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேற்கூரை முழுவதும் சேதமடைந்த வீடுகளை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் சீரமைப்பு பணிகள் வீட்டில் இருப்பவர்களுக்கு திருப்தி அடையும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, கலெக்டர் விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், செயற்பொறியாளர் அனுராதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன் (ஆத்தூர் கிழக்கு), ராமன் (ஆத்தூர் மேற்கு), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், உதவி பொறியாளர் முருகபாண்டி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், சீவல்சரகு ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன் மற்றும் சமத்துவபுரம் பொதுமக்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com