

சென்னை,
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், அடையாறு மண்டலத்தில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று (06.11.2026) செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட இந்திரா நகர் முதல் அவென்யூ பிரதான சாலையில் மூலதன நிதியில் ரூ.9.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற சமூக சுகாதார மையக் கட்டடத்தைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்தக் கட்டடம் 2046 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் 70 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர், வார்டு-178க்குட்பட்ட உதயம் நகர் முதல் பிரதான சாலையில் சென்னை தொடக்கப்பள்ளியின் முதல் தளத்தில் மூலதன நிதியில் ரூ.76.70 லட்சம் மதிப்பீட்டில் 331.27 ச.மீ. பரப்பளவில் கூடுதலாக நான்கு வகுப்பறைகளுடன் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி கலந்துரையாடினார்.
பின்னர், வார்டு-175க்குட்பட்ட டி.என்.எச்.பி. காலனி முதல் பிரதான சாலையில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மாமன்ற உறுப்பினர் து. சுபாஷினி, மண்டல அலுவலர் என்.தட்சிணாமூர்த்தி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது