அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மா.சுப்பிரமணியன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை,

தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவர் மா.சுப்பிரமணியன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன், கடந்த இரண்டு தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

அவருக்கு தொடர் காய்ச்சல் நீடித்து வந்தது. இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மா.சுப்பிரமணியன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் தேறியவுடன் ஓரிரு நாட்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com