சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல்

தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

இந்நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த வகையில் சைதாப்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனைப் போட்டி இருந்தாலும் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக 221 இடங்களில் தி.மு.க. கூட்டணி முன்னிலை பெற்றது வெற்றிக்கான அடையாளம் என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com