

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர் முகமது பர்வேஸ் ரேஷ்மா ஆகியோரின் திருமணம் வருகிற 30-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
புதுக்கோட்டை ஸ்டார் புகையிலை கம்பெனி உரிமையாளரும், புதுக் கோட்டை முன்னாள் நகரசபை துணைத்தலைவருமான மறைந்த எம்.ஜாபர் அலி -ஜெ.கனிஸ் பாத்திமா ஆகியோரின் மகனும், தொழிலாளர் நலன் மற் றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான முகமது பர்வேசுக்கும், அறந் தாங்கியை சேர்ந்த ஜெ.நாசர்- மரியம் பீவி என்கிற செல்லப்பொன்னு ஆகி யோரின் மகள் என்.ரேஷ்மாவுக்கும் வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் திருமணம் நடக்கிறது.
திருமண விழாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். த.வெ.க. பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலை வகிக்கிறார்.
திருமண விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சித்தலைவர்கள், த.வெ.க. நிர் வாகிகள், அமைச்சர் முகமது பர்வேசின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.
தனது திருமண விழாவுக்கான அழைப்பிதழை அமைச்சர் முகமது பர்வேஸ் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து வழங்கி வருகிறார். திருமண அழைப்பிதழில் அவர், 'அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த இந்த திருமண விழாவில் தாங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து எங்களை வாழ்த்தி விழாவை சிறப்பித்து தரு மாறு அன்புடன் அழைக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
முகமது பர்வேஸ் சிறு வயதிலேயே விஜய்யின் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தார். பின்னர், விஜய் மக்கள் இயக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளராகி ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், சமூக பணிகளையும் மேற்கொண்டார். விஜய், த.வெ.க. என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கியவுடன் இவரை புதுக்கோட்டை த.வெ.க. மத்திய மாவட்ட செயலாளராக நியமித்தார்.
சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாகை சூடி, இளம் வயதிலேயே முகமது பர்வேஸ் அமைச்சர் ஆனார். இவர், சட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் கரம்பிடிக்கும் மணப்பெண் என்.ரேஷ்மா எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார்.