மதுரை அருகே மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை நேரில் சந்தித்து ஆறுதல் - அமைச்சர் நிர்மல் குமார்

உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, தேவையான சிகிச்சைகளை விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தபட்டது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்
Published on

மதுரை,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பருத்தி தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்று உள்ளனர்.

அப்போது, அந்த மரத்தில் மின்னல் பாய்ந்ததில், மரங்களின் அருகே நின்று கொண்டிருந்த கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலியாகினர்.

மருத்துவமனையில் சிகிச்சை

ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெறுபவர் வாசியம்மாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி ஆகிய மூவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை மாவட்டம் சூலப்புரத்தில் கடந்த 26.05.2026 அன்று ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்ததும், காயமடைந்ததும் மிகுந்த வேதனையளிக்கிறது. முதல்-அமைச்சர் அண்ணன் உத்தரவின் பேரில் இச்சம்பவத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, தேவையான சிகிச்சைகளை விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தபட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com