

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.11 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட டோலி தொழிலாளர்கள் யோக ரசிம்மர், யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு முதியோர்களை டோலி மூலம் தூக்கி சென்று வருகிறோம். அதில் கிடைக்கும் வருவாய் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். ரோப்கார் இயங்கும் போது தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அரசுப்பணி வழங்க வேண்டும் என அமைச்சர் காந்தியிடம் மனு அளித்தனர்.
கோவில் அதிகாரி ஜெயா, என்ஜினீயர் கிஷோர், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், சோளிங்கர் நகர செயலாளர் கோபி, நகராட்சி துணைத் தலைவர் பழனி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.