பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் ராஜகண்ணப்பன்


பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் ராஜகண்ணப்பன்
x
தினத்தந்தி 23 April 2025 2:06 PM IST (Updated: 23 April 2025 5:43 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக ஆட்சியில் 23 லட்சம் லிட்டர்தான் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னை

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக ஆட்சியில் இலவச கறவை மாடுகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் பால் கொள்முதல் தற்போது குறைந்துள்ளது. அதிக கவனம் செலுத்தி பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "அதிமுக ஆட்சியில் 23 லட்சம் லிட்டர்தான் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கோடை காலத்தில் மே, ஜூன் மாதத்தில் பால் உற்பத்தி அளவு குறைவாக இருக்கும். இருந்தபோதும், தினமும் 4.15 லட்சம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு 6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 2 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு, கறவை மாடு கொடுத்து, கடன் கொடுத்து தான் பால் உற்பத்தி செய்கிறோம். இந்த சூழலிலும், மற்ற மாநிலங்களில் 56 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story