அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும் - ஜெயக்குமார் கிண்டல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும் - ஜெயக்குமார் கிண்டல்
Published on

சென்னை,

17 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

30% அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான். இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும்.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது புகார் வந்தவுடன், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியவர் ஜெயலலிதா. குற்றச்சாட்டு இருந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ரிமாண்டில் சிறை வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். செந்தில் பாலாஜி நிரபராதியாக இருந்தால் சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஏன் இப்படி கபட நாடகம் ஆட வேண்டும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com