அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை - சீமான் பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்று சீமான் கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை - சீமான் பேட்டி
Published on

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு தி.மு.க. அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:-

"அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. தேர்தல் நெருங்க நெருங்க இது போல் பல வேலைகளை மத்திய அரசு செய்யும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வாழ்த்துகள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிர்பார்த்த ஒன்றுதான். தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகிறது. மத்திய அரசு கொடுங்கோல் ஆட்சி முறையை நடத்தி வருகிறது. கைது என்றால் நெஞ்சுவலி வருவதையெல்லாம் நிறைய படத்தில் பார்த்துள்ளோம். அப்படி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலி வர வேண்டும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com