அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14-ந் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு 2 முறை தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து, தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com