

சென்னை,
மாமல்லபுரத்தில் நேற்று சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் பிரதமர் மோடி வந்தார். பிரதமர் மோடி, வேஷ்டி சட்டையில் அணிந்தது, சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை பெற்றது.
இந்த நிலையில், தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்த அளவுக்கு அங்கீகரித்தது கிடையாது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.