ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி

ஈரோடு வந்து கிழக்கு தொகுதி வாக்காளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி
Published on

ஈரோடு,

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதி, கருங்கல்பாளையம் காந்திசிலை பகுதிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com