எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த விருதுநகர் பெண் முத்தமிழ்ச்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த விருதுநகர் பெண் முத்தமிழ்ச்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த விருதுநகர் பெண் முத்தமிழ்ச்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பியுள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"எவரெஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கியிருந்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ்ச்செல்வி. அவரது பயணத்துக்கு கழக அரசு & தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com