உதகை அருகே பழங்குடியினர் பள்ளியில் அமைச்சர் வன்னி அரசு திடீர் ஆய்வு

ஆய்வின் போது, பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் விடுதி வசதிகள் குறித்து மாணவர்களிடம் அமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்தார்.
உதகை அருகே பழங்குடியினர் பள்ளியில் அமைச்சர் வன்னி அரசு திடீர் ஆய்வு.
அமைச்சர் வன்னி அரசு
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் பள்ளியில் இன்று அமைச்சர் வன்னி அரசு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியில் திடீர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வன்னி அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பள்ளிக்கு நேரில் சென்ற அவர், வகுப்பறைகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டார்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

ஆய்வின் போது, பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் விடுதி வசதிகள் குறித்து மாணவர்களிடம் அமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்தார். மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முறையாக சென்றடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாணவர்களுடன் மதிய உணவு

இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தைச் சோதிக்கும் வகையில் பள்ளியின் உணவுக் கூடத்திற்கு அமைச்சர் சென்றார். அங்கு மாணவர்களுடன் வரிசையாக அமர்ந்து அவர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்ட அமைச்சர், உணவின் தரம் மற்றும் சுவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

X