பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி அறிய தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி கேட்டறிவதற்காக தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் செல்ல இருக்கிறார்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி அறிய தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

சென்னை,

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் புழல் சிறையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை இன்று திறந்து வைத்தனர். இதன்பின்னர், புழல் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 114 கைதிகளில் 99 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 5ந்தேதி கொரோனா பாதித்து சிகிச்சைக்கு சென்ற அவர், நலமுடன் இருக்கிறேன் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், கடந்த 13ந்தேதி அவரத உடல்நிலை மோசமடைந்துள்ளது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

எஸ்.பி.பி.யின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், படுக்கையில் இருந்தபடி கையை உயர்த்தி காண்பிப்பது போன்ற புகைப்படமும் இணையதளத்தில் வெளிவந்து வைரலானது. இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் பலரும் உண்மை நிலைபற்றி அறிய முடியாமல் வருத்தமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி கேட்டறிவதற்காக எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com