இலாகா ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை

திட்டங்களை தொடங்குவது தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இலாகா ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதன் பின்பு, தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.

இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சரக்ள் நாளை சென்னை தலைமை செயலகத்தில் பணிகளை தொடங்க உள்ளனர். இந்நிலையில், தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நாளை ஆய்வு கூட்டம் நடத்த உள்ளனர். திட்டங்களை தொடங்குவது தொடர்பாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் விரிவான அறிக்கையை தயார் செய்து முதல்-அமைச்சரின் அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com