அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை


அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 31 Dec 2025 1:07 PM IST (Updated: 31 Dec 2025 1:08 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ், தலைமைச் செயலாளர், நிதிச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் தலைமையிலான குழு முதல்-அமைச்சரிடம் நேற்று இறுதி அறிக்கையை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story