பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், நாசர் ஆய்வு

பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தை அமைச்சர்கள் துரைமுருகன், நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், நாசர் ஆய்வு
Published on

திருவள்ளூர்,

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன்டியில் தற்போது 2,960 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

மேலும் நீர் வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் 10 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதனை அடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர் வரத்து குறித்தும், உபரி நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com