அமைச்சர்கள் திடீர் ஆய்வு: வெள்ளையாக மாறிய தார் சாலை - அதிகாரிகள் செய்த அதிரடி சம்பவம்

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் வருகைக்காக மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் பிளீச்சிங் பவுடர் கொட்டியதால் சாலை பளிச்சென்று மாறியது.
அமைச்சர்கள் திடீர் ஆய்வு: வெள்ளையாக மாறிய தார் சாலை - அதிகாரிகள் செய்த அதிரடி சம்பவம்
Published on

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் வருகைக்காக மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் பிளீச்சிங் பவுடர் கொட்டியதால் சாலை பளிச்சென்று மாறியது.

திவான் பாஷ்யம் தெருவில் மாநகராட்சி அதிகாரிகள் மின்மோட்டார் உதவியுடன் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகளை ஆய்வு செய்ய திடீரென அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் வருவதாக தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சரின் வருகையை அறிந்த அதிகாரிகள் பரபரப்பாக சாலையை சுத்தம் செய்து, ஒரே தெருவில் சுமார் 50 கிலோ பிளீச்சிங் பவுடரை கொட்டி, கருப்பு நிற சாலையை வெந்நிற சாலையாக பளபளப்பாக்கி, மக்களை வியக்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com