அண்ணாசாலை - டேம்ஸ் சாலை சந்திப்பில் நடைபெறும் புதிய நடை மேம்பால பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவை பயிற்சி ஆடுகளம் மற்றும் விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகளுடன் மேம்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அண்ணாசாலை - டேம்ஸ் சாலை சந்திப்பில் நடைபெறும் புதிய நடை மேம்பால பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
Published on

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், சென்னை அண்ணா சாலை - டேம்ஸ் சாலை - ஜெனரல் பீட்டர்ஸ் சாலை சந்திப்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சி.எம்.டி.ஏ. தலைவருமான சேகர்பாபு ஆகியோர் நேற்று நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவை ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா, சுற்றுச்சுவர், பார்வையாளர் மாடம், பயிற்சி ஆடுகளம் மற்றும் விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகளுடன் மேம்படுத்துவது தொடர்பாகவும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளின்போது தயாநிதி மாறன் எம்.பி., வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா, முதன்மை செயல் அதிகாரி கவிதா ராமு உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com