அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தனர்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
Published on

சீர்காழி:

சீர்காழி சட்டநாதர் காவிலுக்கு தி.மு.க. மூத்த அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் சாமி தரிசனம் சய்ய வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகி செந்தில் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அமைச்சர்கள் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் மற்றும் திருநிலை நாயகி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று தங்களது மற்றும் தங்களது குடும்பத்தினர் பெயர்களை சொல்லி சங்கல்பம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவார செப்பேடுகள் வைக்கப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டனர்.தொடர்ந்து அமைச்சர்களுக்கு தருமபுரம் ஆதீன கட்டளை சுப்பிரமணிய தம்புரான் சுவாமிகள் பரிவட்டம் கட்டி, பிரசாதங்களை அளித்து அருள் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், சீர்காழி நகர கழக செயலாளர் சுப்பராயன், ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன், நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com