அமைச்சரின் தாயார் மறைவு; முதல்-அமைச்சர் அஞ்சலி

அமைச்சர் தா.மோ. அன்பரசனின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சரின் தாயார் மறைவு; முதல்-அமைச்சர் அஞ்சலி
Published on

சென்னை,

தமிழக அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருப்பவர் தா.மோ. அன்பரசன். இவரது தாயார் ராஜாமணி வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் நேற்றிரவு காலமானார்.

இதனையடுத்து, சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்வீக இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அவரது இல்லத்திற்கு சென்று, அமைச்சரின் தாயார் உடலுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இதில், மற்ற துறை அமைச்சர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். குன்றத்தூரில் இன்று மாலை மறைந்த ராஜாமணியின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com