

சென்னை,
தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியனிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் லேசான உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்பொழுது நலமுடன் உள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மு.வீரபாண்டியனை இன்று மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.