

பசும்பொன்,
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் பசும்பொன்னில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. நேற்று அரசியல் விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, இன்று அரசு விழாவாக தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுகிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதற்கிடையே, மதுரையில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ், மதன்ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்குச் சென்றனர். அங்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.