விழுப்புரம் அருகே மினிவேன் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி

விழுப்புரம் அருகே மினிவேன் மோதி பொக்லைன் எந்திர ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே மினிவேன் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி
Published on

மினிவேன் மோதல்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்னசெவலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. பொக்லைன் எந்திர டிரைவரான இவர் சம்பவத்தன்று விழுப்புரம் அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே சென்றபோது, பின்னால் வந்த மினிவேன் செல்லதுரை ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த செல்லதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி பலியான செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அவருடைய மனைவி சத்யா கொடுத்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com