ஆவடி அருகே மின்கசிவால் வீட்டில் தீ விபத்து - சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

ஆவடி அருகே மின்கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சமையலறையில் இருந்த சிலிண்டர் வெடித்தது.
ஆவடி அருகே மின்கசிவால் வீட்டில் தீ விபத்து - சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
Published on

ஆவடி அடுத்த திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் 3-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் எம்.ஜி.பாஸ்கர் (வயது 64). கல்லூரி நடத்தி வருகிறார். இவரது வீட்டின் தரைத்தளத்தில் அவரது மகன் பிரபு பாஸ்கர் (39) வசித்து வருகிறார். 2-வது தளத்தில் உள்ள வீட்டில் அவரது மகள் இந்துமதி (41), கணவர் சீனிவாசன் (47) மற்றும் அவர்களது மகன், மகள் வசித்து வந்தனர்.

நேற்று காலை சீனிவாசனும், இந்துமதியும் வெளியே சென்று விட்டனர். அவர்களது மகன், மகள் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது பூஜை அறையில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. பூஜை அறையில் மரத்தாலான அறைகள் இருந்ததால் அதில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவள்ளூர் மற்றும் திருவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் வீடு முழுவதும் தீ பரவியதால் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் கரும்புகை வெளியேறியது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏர்கூலர், நாற்காலி, வீட்டின் ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com