தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் முதியவர் கைது

மணியாச்சி அருகே நாரைகிணறு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் முதியவர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே உள்ள நாரைகிணறு கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம்காத்தான் மகன் சுப்பிரமணியன் (வயது 61). இவர் பேத்தி உறவு முறையான 6 வயது சிறுமிக்கு பாலியல் தெல்லை கெடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி, போக்சே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com