

பெரம்பலூர் நகர பா.ஜ.க. தலைவர் சுரேஷ் தலைமையில் வந்த அக்கட்சியினர் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேலிடம் நேற்று மதியம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் நகர பா.ஜ.க. சார்பில் ஆலம்பாடி ரோடு சமத்துவபுரம் நுழைவு வாயில் அருகே நேற்று முன்தினம் இரவு கட்சி கொடிக்கம்பம் நடுவதற்காக சிமெண்டாலான அடித்தளம் போடப்பட்டிருந்தது. நேற்று காலை சென்று பார்த்தபோது அந்த அடித்தளம் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் கொடிக்கம்பத்திற்கான அடித்தளம் திருட்டு போயிருந்தது. இதில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம், என்று கூறியிருந்தனர்.