ஈரோடு அருகே காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு

இளம்பெண் தற்கொலையா செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
Published on: 

ஈரோடு,

சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பல்லகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் செவிலியாராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போயுள்ளார். உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரின் பெற்றோர் காவல் இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் காணாமல் போன அந்த செவிலியரின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பெருந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செவிலியரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலையா செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com